குரும்பூர் அருகே அரசு பஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

குரும்பூர் அருகே அரசு பஸ் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
X

குரும்பூர் அருகே உள்ள புறையூரில் அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ உருக்குலைந்து கிடக்கிறது.

குரும்பூர் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

குரும்பூர் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்தவர் சரவணன் மனைவி அமுதா(48). வல்லநாட்டை சேர்ந்தவர் கந்தன் மனைவி மாரிசெல்வி(50). இவர்கள் இருவரும் நேற்று குடும்பத்துடன் நேற்று ஆட்டோவில் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணிய மணிகண்டன்(45) ஓட்டினார்.

குரும்பூர் அடுத்த புறையூர் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அமுதாவும், மாரிசெல்வியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் சுப்பிரமணிய மணிகண்டன், குழந்தைகள் நவீன்ராஜா, மஞ்சு, மிதுன் உட்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வைத்தனர். இதுகுறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!