ஆழ்வார்திருநகரியில் சமூக ஒருங்கிணைப்புக் கூட்டம்: எஸ்.பி. பங்கேற்பு

ஆழ்வார்திருநகரியில் சமூக ஒருங்கிணைப்புக் கூட்டம்: எஸ்.பி. பங்கேற்பு
X

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு கூட்டத்தில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய், உதவி ஆய்வாளர் செல்வன் உட்பட காவல்துறையினர் மற்றும் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:

கிராமங்களில் எந்தவித ஜாதிய அடிப்படையிலான சண்டை சச்சரவு இல்லாமல் சமூகம் அமைதியான முறையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தை குற்றம்மில்லா மாவட்டமாக மாற்றுவது இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு நடிவக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையின் மீது முழு நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய புகார்கள் மீது சட்டரீதியாகவும், நியாயமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருவேறு சமுகத்தினரிடையே ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகளை சாதிப் பிரச்சனையாகவோ, பொதுப்ப பிரச்சினையாகவோ ஆக்காமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்து சுமூகமாக தீர்க்க முயல வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறித்து உங்கள் ஊரில் உள்ள இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதைபொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் இளைஞர்கள், மாணவர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பி வருகின்றனர். அதற்கு காவல்துறை கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பெண்கள் உட்பட பொதுமக்கள் தாமாக முன்வந்து மாவட்டம் முழுவதும் உள்ள தெருக்குழாய், தண்ணீர் தொட்டி, மின்சார கம்பம் உட்பட பொது இடங்களில் இருந்த 6678 ஜாதி அடையாளங்களை நீக்கி தமிழ்நாட்டில் ஜாதி அடையாளங்கள் இல்லாத முதன்மை மாவட்டமாக மாற்றியதற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தொடர்ந்து கடைபிடித்தால் உங்கள் பகுதிக்கும், உங்கள் ஊருக்கும் நல்லது. இளைஞர்கள் உட்பட அனைவரும் உங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் பழகி ஒற்றுமையாக இருங்கள்.

உங்கள் பகுதிகளில் ஜாதி பெயரை சொல்லியோ அல்லது ஜாதி ரீதியாக பிரச்சனை செய்தாலோ அவர்களை அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்த பெரியோர்களாகிய நீங்களே அது தவறு என்று சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். உங்கள் பகுதிகளில் உள்ள இளைஞர்களில் தவறு செய்பவர்கள் யார், நல்லவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும், அதில் தவறு செய்பவர்களை நீங்களே திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சகோதரத்துவத்துடன் பழகி, பழிக்குபழி என்ற எண்ணத்தை கைவிட்டு, ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!