குரும்பூர் அருகே 25 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி சந்தித்த நிகழ்ச்சி நடந்தது.
குரும்பூர் அருகே உள்ளது பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1997ம் ஆண்டு 9 முதல் பிளஸ் 2 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் முன்பக்க கேட் முதல் ஆடிட்டோரியம் வரை முன்னாள் மாணவர்களை வரவேற்று அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. காலை முதலே முன்னாள் மாணவ, மாணவிகள் தன்னுடன் படித்தவர்களை பார்த்து பூரிப்படைந்தனர். கடந்த கால நினைவலைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியில் படித்தபோது எப்படி ஒருவருக்கொருவர் கேலி கிண்டல் செய்தனரோ, அதே சந்தோசத்துடனும், பாசத்துடனும் பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து தங்களுக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி பேசினர். நேற்று காலை முதல் மாலை வரை முன்னாள் மாணவர்களின் சந்திப்பால் பள்ளியில் சிரிப்பலை மட்டுமே கேட்டது. பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும், வக்கீலாகவும், அரசியல் வாதிகளாகவும், வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் தங்களது நண்பர்களையும், தோழிகளையும் சந்தித்ததும் அனைவரும் மாணவர்களாகவே மாறினர்.
அதிலும் முன்னாள் மாணவி ஒருவர் 25 வருடங்களுக்கு பின்னர் ஒரு மரத்து பறவைகளான நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம் என்று ஆனந்த கண்ணீருடன் பேசியது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் சிறப்பு விருந்தளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் பிரபாகரன், தலைமையாசிரியர் வித்யாதரன் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரான முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விசாகபாண்டியன், ரூபன் சாமுவேல், கோவை வக்கீல் சரவணன், ரவி, ராம்பிரசாத், ராபின் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu