ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள்: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆய்வு.

Adichanallur Excavation in Tamil
X

Adichanallur Excavation in Tamil

Adichanallur Excavation in Tamil-தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Adichanallur Excavation in Tamil-தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழிகள் மீது கண்ணாடி அமைத்து அதன் மேல் நின்று பார்ப்பது போல் அமைப்பும், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளும் ஆதிச்சநல்லூரில் நடந்து வருகிறது.

அந்தப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று அடிக்கடி பார்வையிடுவது வழக்கம். அவரது முயற்சியால் தான் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் விரைவில் கிடைத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி மாறுதலில் சென்னை செல்ல உள்ளார். இருப்பினும், ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டார்.

அகழாய்வு பணிகள் இயக்குநர் அருண்ராஜ் ஆட்சியர் செந்தில்ராஜிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அருங்காட்சியகம் அமைய உள்ள பணிகள் குறித்து அவர் விளக்கமளித்தார். பின்னர் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆர்வமாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழாவிற்கு தான் சென்னையில் பணியில் இருந்தாலும் நிச்சயம் வருவதாக ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்தார். தொடர்ந்து பணியாளர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!