தண்ணீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து சாதனை புரிந்த 76 வயது முதியவர்

தண்ணீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து சாதனை புரிந்த 76 வயது முதியவர்
X

தாமிரபணி ஆற்றில் தண்ணீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து சாதனை படைத்த முதியவர் சண்முகசுந்தரம்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து 76 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், பால்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். பணிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை சண்முகசுந்தரம் பெற்றுள்ளார். தனது 12 ஆவது வயது முதல் சிலம்பம் பயின்ற ஆசிரியர் சண்முகசுந்தரம் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

தற்போது ஆழ்வார்திருநகரி கோல்ட் ஸ்டார் சிலம்பம் பயிற்சி பள்ளியில் கிராண்ட் மாஸ்டராக சண்முகசுந்தரம் உள்ளார். சிலம்பம் மட்டுமின்றி கராத்தே, வில்வித்தை யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை சண்முகசுந்தரம் இலவசமாக அளித்து வருகிறார். ஆசிரியர் சண்முகசுந்தரத்திடம் பயிற்சி பெற்று வரும் பலர் மாநில அளவிலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சிலம்ப கலைமுதுமணி விருது பெற்றுள்ள சண்முகசுந்தரம், கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், தண்ணீர் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது வயதையும் பொருட்படுத்தாமல் ஶ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்த படி யோகாசனம் செய்தார்.

அவர், தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், பூமாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து அசத்தினார். தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி 76 வயதுடைய சிலம்பம் மாஸ்டர் சண்முகசுந்தரம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிந்தபடி யோகசாசனம் செய்ததை அந்தப் பகுதியில் இருந்த பலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பாராட்டு தெரிவித்து உள்ளனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....