/* */

75 திட்டங்களுக்கு ரூ. 6000 கோடி வழங்கிய பிரதமர் மோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Finance Minister Nirmala Sitharaman - நாட்டின் காலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக 75 திட்டங்களுக்கு, ரூ. 6000 கோடியை பிரதமர் மோடி வழங்கி உள்ளார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

75 திட்டங்களுக்கு ரூ. 6000 கோடி வழங்கிய பிரதமர் மோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
X

Finance Minister Nirmala Sitharaman- ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியம் கட்டுவதற்கான அடிக்கல்லை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டினார்.

Finance Minister Nirmala Sitharaman- தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் அருங்காட்சியகம் கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூரில் இன்று நடைபெற்ற அருங்காட்சிய அடிக்கல் நாட்டு விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

உலகத்தில் உள்ள பழமையான சில இடங்களிலேயே மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த மக்களின் கலாச்சாரத்தை பற்றி அறிந்துகொள்ளும் சின்னங்களை அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளியே எடுத்து பார்க்கிறோம். நாகரிகங்களில் 3 முதல் 4 கால கட்டங்களில் ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இங்குள்ள மக்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி வணிகம் செய்துள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பறம்பு இரும்புக்காலத்தை சேர்ந்தது என்கிறார்கள். இங்கு இறந்தவர்களை தாழிகளில் இட்டு ஈமச்சடங்கு செய்து புதைத்துள்ளனர். மேலும், எகிப்து பிரமீடுகளில் உள்ளதுபோது இறந்தவர்களின் உடலை மூலிகைகளினால் பதப்படுத்தி அவர்கள் வாழ்ந்தபோது பயன்படுத்திய நகைகள், ஆடைகள், உணவு ஆகியவற்றையும் சேர்த்து புதைத்துள்ளனர்.

அலெக்ஸாண்டர் ரியோ 1890 ஆம் ஆண்டுகளிலேயே இங்கு அகழ்வாராய்ச்சி செய்துள்ளார்கள். அதன்பிறகு சுமார் 100 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது. நாம் தற்போது பொது யுகம் 2000 வருடங்களுக்கு பின் உள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பொது யுகம் தொடங்குவதற்கு முன்பு 270 வருடங்கள் பழமையான பொருட்கள், 470 வருடங்கள் பழமையான பொருட்கள் கூட இங்கு கிடைத்துள்ளன.

நாடு முழுவதும் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என்று 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆதிச்சநல்லூர் முன்னணியில் இருக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து பொருட்களை கண்டறியவும், அதேபோல் அலெக்ஸாண்டர் ரியோ காலத்தில் கண்டறியப்பட்ட பொருட்களையும் சேர்த்து அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களிலேயே பொதுமக்கள் அறிந்து கொள்ள அருங்காட்சியகம் அமைக்க இந்திய தொல்லியல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இங்கிருந்து 5000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் எல்லாம் நெதர்லாந்து வரை எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த பொருட்களை எல்லாம் மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரக்கூடிய பல தலைமுறையினர் நமது மூதாதையர்கள் இப்படிதான் வாழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் வகையில் பழங்கால பொருட்கள் கிடைத்த இடத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு போதிய நிதியை எந்தவித தடையுமின்றி வழங்கவுள்ளது. இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பழங்கால பொருட்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல்பூர்வமாக அமைக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள் அறியும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கண்ணாடிக்குள் வைக்கப்படும் பொருட்களில் க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்டு கண்ணாடிக்கு மேலேயே பொதுமக்கள் தங்களது அலைபேசியை வைத்து ஸ்கேன் செய்தால் அந்த பொருள் பற்றி ஒலி வடிவில் அவர்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. நாட்டின் காலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக 75 திட்டங்களுக்கு பிரதமர் மோடி ரூ. 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Updated On: 5 Aug 2023 1:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?