முறப்பநாடு அருகே மது விற்ற 5 பேர் கைது

முறப்பநாடு அருகே மது விற்ற 5 பேர் கைது
X

கைது செய்யப்பட்டவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகளும்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார், முறப்பநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முறப்பநாடு அருகே பாறைக்காடுபஸ்நிலையம், முருகன்புரம், திருவேங்கடபுரம், வல்லநாடு பஜார், நாணல்காடு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக முறப்பநாடு மேலதெருவை சேர்ந்த செல்வம் மகன் சுடலைக்கண்ணு (31), பாறைக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மகன் பொன்னையா (42), மேலசெக்காரக்குடி சுடலை மகன் மூர்த்தி (53), நாணல்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் முத்துசாமி (51), வல்லநாடு கணபதி கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துமாலை (40), ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 121 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future