ஸ்ரீவைகுண்டத்தில் இருசக்கரவாகனத்தில் ஆற்று மணல் திருடியதாக 2 பேர் கைது

ஸ்ரீவைகுண்டத்தில் இருசக்கரவாகனத்தில் ஆற்று மணல் திருடியதாக 2 பேர் கைது
X
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளக்கூடாது என உத்தரவு உள்ளது. இதனால், சிலர் சட்டவிரோதமாக மணல் திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் திருட்டை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும், காவல் துறையினரை ஏமாற்றும் வகையில் மாட்டு வண்டியில் சென்றும், இருசக்கர வாகனத்தில் சென்றும், கழுதைகள் மீது மூட்டைகளை ஏற்றியும் மணல் திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று மணல் திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் சண்முகம் (26) மற்றும் ஸ்ரீவைகுண்டம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கண்ணன் (41) ஆகியோர் என்பதும் அவர்கள் இருசக்கர வாகனத்தின் மூலம் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 மூட்டை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு