மாலத்தீவில் கைதான தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் விடுவிப்பு

மாலத்தீவில் கைதான தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் விடுவிப்பு
X

மாலத்தீவில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள்.

மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரையும் மாலத்தீவு அரசு விடுவித்துள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து 12 மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் கடந்த 1 ஆம் தேதி அரபிக் கடல் பகுதியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மாலத்தீவு கடற்பகுதி அருகே இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்போது அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களையும் கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் குறித்து கடந்த 27 ஆம் தேதி தருவைகுளம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தருவைகுளம் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், 12 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இந்த நிலையில் மாலத்தீவு அரசு மற்றும் கடற்படை கைது செய்த 12 மீனவர்களை மட்டும் விடுவித்துடன் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை விடுவிக்க மறுத்து வருகிறது.

இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள 12 மீனவர்களும் தங்களோடு சேர்த்து விசைப்படகையும் விடுவித்தால் தான் தாங்கள் சொந்த ஊரான தருவைகுளத்திற்கு திரும்பிச் செல்வோம் என மாலத்தீவிலேயே இருந்து வருகின்றனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக விடுவிக்கப்பட்ட மீனவர்களுடன் விசைப்படகையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!