/* */

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடியில் நடைபெற்று வந்த என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
X

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையம். (கோப்பு படம்).

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கட்டுப்பாட்டின் கீழ், தூத்துக்குடி துறைமுக சாலையில் என்டிபிஎல் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்களை கொண்ட என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் தினமும் ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்எல்சிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ மற்றும் பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகளுடன் என்எல்சி நிர்வாகம் மற்றும் என் டி பி எல் நிர்வாகம் நடத்திய ஐந்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே, 8 ஆவது என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமையிடத்து தொழிலாளர் துறை தலைமை ஆணையர் தலைமையில், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் ஊழியர் மத்திய அமைப்பு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் என்எல்சி-என்டிபிஎல் உயர் அதிகாரிகள் இடையே ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

போராட்டக்குழுத் தலைவர் அறிக்கை:

போராட்டம் வாபஸ் குறித்து போராட்டக்குழு தலைவர் அப்பாத்துரை வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

என்டிபிஎல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1300 பேர் கடந்த எட்டு நாட்களாக சிஐடியு சங்கத்தின் தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று சென்னை துணை தொழிலாளர் தலைமை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில், என்எல்சி நிறுவனத்தில் இருந்து மனிதவள செயல் இயக்குநர் தியாகராஜன் தலைமையில் 5 உயர் அதிகாரிகள், காண்ட்ராக்டர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன், மாநில துணைத்தலைவர் விஜயன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல், போராட்டத்தின் தலைவரும் மின் ஊழியர் மத்திய அமைப்பு என்டிபிஎல் கிளைச் செயலாளருமான அப்பாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றோம்.

பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை 5.5.2023-க்குள் துணை தலைமை ஆணையர் இறுதி முடிவு எடுக்க உறுதி அளித்துள்ளார். அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படும்.

தேசிய விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைக்காக இதுவரை வழங்கப்படாத பிஹெச் ஊதியம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை 6.10. 2022 தேதியில் இருந்தும் சூப்பர்வைஸர்கள் மற்றும் பொறியாளர்களை பொருத்தவரை 1.1.2023 தேதியில் இருந்தும் வழங்கப்படும்.

மாதச் சம்பளம் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதியோ அதற்கு முன்பாகவோ வழங்கப்பட்டு விடும். ஒப்பந்த தொழிலாளர்கள் குறைகளை சரி செய்ய குறை தீர்ப்பு குழு அமைக்கப்படும். அதில் சங்க பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படுவார்.

மாத ஊதியம் 21,000 ரூபாய்க்கு மேல் பெறக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் பொறியாளர்களுக்கு போனஸுக்கு பதிலாக கருணைத்தொகை வழங்குவது குறித்து உரிய நேரத்தில் பேசி தீர்வு காணப்படும். என்எல்சி தலைமையகம் உட்பட அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி 75 நாட்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இல்லையெனில் வேலை நிறுத்தம் மீண்டும் தொடரும்.

கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் மே 5 வரை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள போராட்டக் குழு முடிவு செய்துள்ளது. நாளை காலை 6 மணிக்கு போராட்டம் முறைப்படி விலக்கிக் கொள்ளப்படும் என போராட்டக் குழு தலைவர் அப்பாதுரை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Feb 2023 6:56 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  2. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  3. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  4. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  5. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  7. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  8. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  9. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?