நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நீட் தேர்வை ரத்து செய்யலாம்; சட்டமன்றத் தலைவர் அப்பாவு யோசனை

தூத்துக்குடி தனியார் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.
தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் பயின்று முடித்துள்ள, பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவு, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பி.எஸ்சி நர்சிங் 8 ஆவது பேட்ச் முடித்துள்ள 40 மாணவிகளுக்கும், டிப்ளமோ 46 ஆவது பேட்ச் முடித்துள்ள 50 மாணவிகளுக்கும் என மொத்தம் 90 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில், அருட்சகோதரி பவுலின் அகஸ்டின் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் மற்றும் மாணவிகள், மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவு பேசியதாவது,
ஜிஎஸ்டியில் இந்தியாவில் மிக அதிக வசூல் செய்து கொடுக்ககூடிய மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கூடியது தமிழகம்தான். அதனை பிடிக்காத சிலர் நீட் தேர்வு என்ற ஒன்றினை கொண்டு வந்து நமது கல்விகொள்கையை சீர்குழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். நாட்டில் உள்ள 4 சதவீதம் பேர் வேறு யாரும் மருத்துவம் படித்துவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர்.
கல்வி கட்டமைப்பை அழிப்பதற்காக கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு. அதனை கொண்டு வரவிடக்கூடாது என்பதற்காகதான் தமிழக முதல்வர் ஸ்டாலினும், விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸாடாலினும் கடுமையாக எதிர்த்து போராடுகின்றனர்.
எனவே, முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல் நாடாளுமன்ற தேர்தலில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அடுத்த நொடியே நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்று, தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu