லியோ திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தூத்துக்குடி ஆட்சியர் !
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாள் அதிகபட்சம் 5 காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும். வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 1.30 முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக்கூடாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது.
கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வட்டாட்சியர் 9445000680, திருச்செந்தூர் வட்டாட்சியர் 9445000682, சாத்தான்குளம் வட்டாட்சியர் 9445000683, ஏரல் வட்டாட்சியர் 9384095008, கோவில்பட்டி வட்டாட்சியர் 9445000684, தூத்துக்குடி உதவி ஆட்சியர் 9445000479, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000480, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் 9445000481 ஆகியோரை அவர்களது கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும், திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான இருக்கை வசதிகள், வாகன நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu