பொது சிவில் சட்டம் தவறாக முன்னிறுத்தப்படுவதாக தெலுங்கானா ஆளுநர் குற்றச்சாட்டு

பொது சிவில் சட்டம் தவறாக முன்னிறுத்தப்படுவதாக தெலுங்கானா ஆளுநர் குற்றச்சாட்டு
X

தூத்துக்குடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார்.

பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்க்கு எதிரான சட்டம் என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆன்மீகம் நமது நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுகிறது. தமிழகத்தில் அது குறைவாக உள்ளது. தூத்துக்குடி எம்பி கனிமொழியின் ஒரு கோரிக்கை ஒன்றை நான் பார்த்தேன். அதில் ஒரு மதம் சார்ந்த ஒரு திருவிழாவிற்கு அதிக பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஒருவேளை என் கண்ணில் அது மட்டும் தான் பட்டதா என்று தெரியவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் போன்ற அனைத்து வழிபாட்டு தலங்களும் உள்ளன. எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி, ஒருவேளை விடாமல் விட்டிருந்தால் ஏன் கண்ணில் மட்டும் பட்டிருந்தால் ஏற்றத்தாழ்வு பாரபட்சம் இருக்கக் கூடாது.

முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. ஆக, இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீக நிலைமை இருக்க வேண்டும். பாரத பிரதமர் சொல்வது போல நமது ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள எலிகள் கஞ்சாவை தேடி போலீஸ் நிலையம் வருகிறது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது. எலிகளின் போதையை எப்படி தடுப்பது என்ற ஒரு பெரிய பிரச்னை தமிழகத்தில் ஓடி கொண்டுள்ளது.

பாரத பிரதமர் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்றொரு திட்டத்தில் மரம் நடவேண்டும் அதே மாதிரி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சமமானது என பாரத பிரதமர் தெளிவாக சொல்லுகிறார். பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்க்கு எதிரான சட்டம் என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். பொது சிவில் சட்டம் என்றால் பொதுவாக இருக்கின்ற ஒரு சட்டம் இது தவறாக முன்னிறுத்தப்படுகிறது என தமிழசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்