தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை
X

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தினை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் ரூ. 4.06 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 துணை சுகாதார நிலையங்கள், ஒரு செவிலியர் குடியிருப்பு கட்டிடம், 2 வெளி நோயாளிகள் பிரிவு, ஒரு சுகாதார ஆய்வகம், ஒரு கண் அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.50 கோடி செலவில் 7 துணை சுகாதார நிலையங்கள், ரூ. 65 லட்சம் செலவில் 3 ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டிடங்கள், ரூ. 12.25 கோடி செலவில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் RTPCR ஆய்வக கட்டிடம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டிடம், பல்நோக்கு தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகிய சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மொத்தம் ரூ.14.40 கோடி செலவில் 13 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது தமிழ்நாடு இதுவரை 478 பெற்றுள்ளது. இந்த வருடத்தில் 239 விருதுகள் பெற்றுள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இளையரசநேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம், கருங்குளம் சமுதாய சுகாதார நிலையம், முடிவைத்தானேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம், முள்ளக்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், தருவைரோடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.

மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் தமிழ்நாடு இதுவரை 77 சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த வருடத்தில் 43 சான்றிதழ் பெற்றுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகியவை விருதுகள் பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2023-24 இல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 இலட்சம் மதிப்பில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள், ரூ.40.38 இலட்சம் மதிப்பில் உடற்கூராய்வு மையம் மேம்படுத்துதல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1.25 கோடி புதிய ஒருங்கிணைந்த ஆய்வக கட்டிடம், விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.5.55 கோடி மதிப்பில் புதிய கட்டிடம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.80 இலட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டணப் படுக்கைகள், புன்னகாயல், புதுக்குடி, மதிமண்விலை பகுதியில் ரூ.1.08 கோடி மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டிடங்கள், தருவை ரோடு, மடத்தூர், கணேஷ்நகர், காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக மருத்துவ கட்டிடப்பணிகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ. 136.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா