தூத்துக்குடி கோட்ட அஞ்சலங்களில், வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி கோட்ட அஞ்சலங்களில், வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு
X

அஞ்சலகங்களில், கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடு (கோப்பு படம்)

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிப்போர் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க, தூத்துக்குடி கோட்ட அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சுணக்கு துவங்கி பயன்பெறலாம்.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்டஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். இந்த சுணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது.

இந்த வங்கி மூலம், மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை. அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும்.

இந்த வங்கியின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சுமார் 16,000 பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. தற்பொழுது, ஆதார் எண் விடுபட்டுள்ள சுமார் 10,000 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செப்டம்பர் 4 ஆம் தேதியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களில், செப்டம்பர் 9 ஆம் தேதி வரையிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையலாம் என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story
ai in future agriculture