தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற தூத்துக்குடி காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற தூத்துக்குடி காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
X

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட முதல்நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ் (CCTNS) என்ற இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.

இந்த இணையதள பயன்பாடு குறித்து புதுடில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவராக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சி.சி.டி.என்.எஸ் இயக்குபவரான முதல்நிலை காவலர் ஜான்பால் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கடந்த 22.12.2023 அன்று புதுடில்லியில் வைத்து தேசிய குற்ற ஆவண காப்பகம் விருது வழங்கியது.

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற புதுக்கோட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ஜான்பாலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டினார்.

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!