தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
X

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம்தோறும் காவல் துறை அதிகாரிகளுடன் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில், தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் கண்ணன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ரேவதி, சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ராஜாமோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ், வசந்தராஜ், மாயவன், லோகேஸ்வரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare