தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமம் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவியாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்று தருவதற்கும், குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காகவும் குழந்தைகள் நல காவல் அலுவலர் என்ற குழு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டு அதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குழந்தைகள் நல காவல் அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமம் முதன்மை நடுவர் குபேந்திர சுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும் காவல்துறையினருக்கு இளைஞர் நீதி குழுமத்தின் முதன்மை நடுவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
நிகழ்வில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி இளைஞர் நல நீதி குழுத்தின் உறுப்பினர்கள் ஜான் சுரேஷ், உமா தேவி மற்றும் நன்னடத்தை அதிகாரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu