முதல்வர் குறித்து அவதூறு கருத்து: தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது

முதல்வர் குறித்து அவதூறு கருத்து: தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது
X

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வபாலன்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு செய்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவர், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

இவர், சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த மனு விவரம் வருமாறு:

எனது மொபைலில் அந்தோணி கண்ணன் என்ற முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய முகநூல் பக்கத்தை பார்க்கும் பொழுது செல்வ பாலா செல்வா என்பவரது முகநூல் பக்கத்தில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று கொண்டிருப்பது போலவும், அவருக்கு முன்னால் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் பாலு மற்றும் தொழிலதிபர் சபரிசன் ஆகியோர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக உள்ள கைகட்டி நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

மேலும், அதற்கான கமெண்டில் அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம் மொத்த திராவிடியான்கள் கதறல் என்று பதிவிட்டுள்ளார். இதனால் பாஜக கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்த நபரின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் அந்தோணி ராஜ் தெரிவித்து இருந்தார்.

அவரது புகாரின் பேரில் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தரவின் அடிப்படையில் சிப்காட் போலீசார் செல்வபாலனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர் மீது 153, 153(A)(1)(A), 505(1)(b), 504 IPC, 67(A) IT Act ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வபாலனை கைது செய்து தூத்துக்குடி மூன்றாவது நீதித்துறை நடுவர் சேரலாதன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து செல்வ பாலனிடம் விசாரணை நடத்திய நீதிபதி சேரலாதன், விசாரணையின் அடிப்படையில் செல்வபாலனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட செல்வபாலன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அருகில் அடைக்கப்பட்டார். மின்சாரத்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில், தூத்துக்குடி பாஜக நிர்வாகி முதல்வர் படத்தை சித்தரித்து வெளியிட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!