மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம். (கோப்பு படம்).
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவில்பட்டி ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரகுராம் (30) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் புலன் விசாரணை செய்து கடந்த 09.10.2017 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம்சாட்டப்பட்ட ரகுராம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லாபாய், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu