காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு; தூத்துக்குடி மையங்களில் டிஐஜி ஆய்வு

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு; தூத்துக்குடி மையங்களில் டிஐஜி ஆய்வு
X

தூத்துக்குடி பிஎம்சி பள்ளி தேர்வு மையத்தில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்களில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், 2023 ஆம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்டத்தில், 5144 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேற்று நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நான்கு தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தேர்வு மையங்களில் சிறப்பு அதிகாரியான திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நேரடி உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை பார்வையிட்ட போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்ற நான்கு மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்கள் ‘சீல்’ வைக்கப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!