வேம்பாரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கடல்அட்டைகள் பறிமுதல்

வேம்பார் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். இதில் ரூ 4 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக சூரங்குடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சூரங்குடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் வேம்பார் கடற்கரை பகுதியில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேன் ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அந்த வேனில் கடல் அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து வேனில் இருந்த நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவரது மகன் அபுல் மைதீன்(34) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது சட்டவிரோதமாக கடல் அட்டை கடத்திச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அபுல்மைதீனை கைது செய்து, சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu