புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை: 14 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை: 14 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
X
தூத்துக்குடி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 14 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் தூத்துக்குடி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையின் கீழ் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களான ஜோதிபாஸூ, சக்திமுருகன், சிவக்குமார் மற்றும் காளிமுத்து ஆகியோர் தங்கள் அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, 14 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டு, அந்தக் கடைகள் அனைத்தும் 14 தினங்களுக்கு குறைவில்லாமல் மூடி வைக்கப்பட்டு, மொத்தமாக ரூ. 95,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை கண்டறியப்பட்டுள்ளது. இதையெடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அபராதத் தொகையை அரசு கணக்குத் தலைப்பில் இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட வணிகர்கள் செலுத்திய பின்னர், திரும்பவும் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால், கடையானது முன்னறிப்பு இன்றி மூடி சீல் வைக்கப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, கடையை மீண்டும் திறக்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு