தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கு நிவாரண உதவி

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கு நிவாரண உதவி
X

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, ஆதரவற்ற விதவை பெண்களுக்கு இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி நிவாரண உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடிய ஏழை, எளிய, ஆதரவற்ற விதவை, கணவனாக கைவிடப்பட்ட பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி நிவாரண உதவி வழங்கினார்.

கனமழையினால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதியில் அதிகமான வெள்ளநீர் தெருக்களிலும், வீடுகளிலும், பஜார் கடை முழுவதும் வெள்ளம் புகுந்தது. அனைத்து உடைமைகளையும் வெள்ளநீர் அடித்து சென்றது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் அடைந்து பொருட்சேதங்கள் ஏற்பட்டதால் பலரும் பாதிக்கப்பட்டனர். உள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் அதிகமான வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். தற்போது அதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதிலும் புறக்கணிக்கப்பட்ட ஏழை எளிய ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கூலி வேலைக்கு கூட சொல்ல முடியாமல் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் உண்ண உணவின்றி மிகுந்த சிரமப்பட்டு வருவதை அறிந்து. அப்பகுதிக்கு நேர சென்று ஆய்வு செய்ததில் மாவட்டத்தில் பல இடங்களில் ஏழை, எளிய, ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதை அறிந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிளுக்கு நேரடியாக மதர் சமூக சேவை நிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களிலும், புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருக்கக்கூடிய தின கூலி வேலைக்கு செல்லக்கூடிய ஏழை, எளிய, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மதர் சமூக சேவை நிறுவன அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டொம்னிக் சாவியோ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 1000 மதிப்புள்ள போர்வை, துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார். இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, சமூக ஆர்வலர் கல்விளை வி.பி.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!