மழை வெள்ளப் பாதிப்பு: தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆய்வு!

மழை வெள்ளப் பாதிப்பு: தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆய்வு!
X

தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அதிகாரிகளிடம் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது மீட்பு பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும், மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நண்பகல்12 மணியளவில் வந்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போது பாதிப்பு விவரங்களை அவரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள், துறை இயக்குநர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் வெள்ளை சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண பணிகள் குறித்தும் அவர் விளக்கம் கேட்டு ஆலோசனை நடத்தினார்.

மேலும், மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிவிப்புகள் விவரம் மற்றும் அது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிக்கு தேவையான நிவாரணங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனிடம் வழங்கினார். அப்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.

அதன் பின்னர், குறிஞ்சி நகர் பகுதியில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வீடியோ மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உட்பட அனைத்து துறை இயக்குநர்கள், செயலாளர்கள் உடன் இருந்தனர்.

தகவலுக்காக

மழைக்காலம் என்பது அழகான காலமாகும், ஆனால் அது சில ஆபத்துக்களையும் கொண்டுள்ளது. மழை, வெள்ளம், மழைநீர் தேக்கம் மற்றும் மின்னல் ஆகியவை இந்த ஆபத்துக்களில் அடங்கும். மழைக்காலத்தில் தற்காத்துக் கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:

மழை பெய்யும்போது வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள்.

வெளியே செல்ல வேண்டியிருந்தால், துணிகள் மற்றும் காலணிகள் நன்கு பொருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் ஈரமாகாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

தண்ணீர் தேங்கும் இடங்களைத் தவிர்க்கவும். இந்த இடங்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் அவை உங்களைத் தள்ளிவிடலாம் அல்லது நீரில் மூழ்கடிக்கலாம்.

மின்னல் பெய்யும்போது வெளிப்புறத்தில் இருக்க வேண்டாம். உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.

**வீட்டில் இருக்கும்போது, **

மின்சார சாதனங்களிலிருந்து விலகி இருங்கள்.

வீட்டைச் சுற்றி மரங்கள் அல்லது மின் கம்பிகள் போன்ற ஆபத்தான பொருட்களைத் தவிர்க்கவும்.

நிலநடுக்கம் அல்லது சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு தயாராக இருங்கள்.

வீட்டில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேங்கிய நீர் ஈரப்பதத்தையும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், மழைக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கலாம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!