தூத்துக்குடியில் கொலையான பால் வியாபாரி உடலை வாங்க மறுத்து 2 ஆவது நாளாக போராட்டம்
தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி நந்தகுமாரை நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும்போது முன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலையான நந்தகுமார் உடலை வாங்க மறுத்து பண்டாரம்பட்டி கிராம மக்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், குற்றவாளிகள் மீது 30 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலையுண்ட நந்தகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் சார் ஆட்சியர் கௌரவ்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்களின் இந்த போராட்டம் காரணணாக பண்டாரம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu