கனிமொழி எம்பி, 3 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 2100 பேர் மீது வழக்குப்பதிவு

கனிமொழி எம்பி, 3 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 2100 பேர் மீது வழக்குப்பதிவு
X

கொரோனா காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தூத்துக்குடி தொகுதி எம்.பி.,கனிமொழி உட்பட 2100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் நேற்று தூத்துக்குடி விவிடி சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி கூட்டம் கூடியது உள்ளிட்ட (148, 188,269) ஆகிய மூன்று பிரிவுகளில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி மற்றும் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா உள்ளிட்ட மூன்று திமுக எம்எல்ஏக்கள் உட்பட 2100 பேர் மீது தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!