தூத்துக்குடியில் ஜெயிலர் திரைப்படத்தை இலவசமாக பார்வையிட்ட மாற்றுத்திறனாளிகள்

தூத்துக்குடியில் ஜெயிலர் திரைப்படத்தை இலவசமாக பார்வையிட்ட மாற்றுத்திறனாளிகள்
X

தூத்துக்குடியில் ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்த  மாற்றுத்திறனாளிகள்.

ஜெயிலர் திரைப்படத்தை மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பார்வையிடும் வகையில் தூத்துக்குடியில் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் ரூ. 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அந்தப் படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் இன்னும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

திரைப்படம் வெளியாகி 50 ஆவது நாளை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் சார்பில், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் சுமார் 170 டிக்கெட்கள் புக் செய்து அதனை மாற்றுதிராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்டுகளிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை பாலகிருஸ்ணா திரையரங்கம் அழைத்து வந்து அவர்களை ஜெயிலர் திரைப்படத்தினை காண செய்தனர்.


இந்த திரைப்படத்தினை காண வந்த அனைத்து மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாலகிருஷ்ணா திரையரங்கம் சார்பில், பாப்கார்ன், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு திடீரென ஜெயிலர் படத்தில் வரும் ரஜினிகாந்த் போன்ற கெட்டப்பில் திரையரங்கிற்குள் வந்த ரஜினி ரசிகர் ஒருவர் அங்கிருந்த மாற்றுதிறனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் போல் பல்வேறு ஸ்டைல்களின் செய்கைகளை செய்து ரஜினிகாந்த் போல் அங்கும் இங்கும் நடந்து சென்று திரையரங்குகளில் இருந்த மாற்றுதிறனாளிகளை சந்தோஷபடுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் போல் அப்படியே வேடமிட்டிருந்த அந்த ரசிகருக்கு மாற்றுத்திறனாளிகள் கை கொடுத்து வரவேற்றனர். பின்னர், அதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் மாற்றுதிறனாளிகளுக்கு திரையிடப்பட்டது. அவர்கள் ஆர்வமுடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்து ரசித்து சென்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா