தூத்துக்குடியிலேயே பாஸ்போர்ட் சான்றிதழ் சரிபார்ப்பு சேவை துவக்கம்!
தூத்துக்குடி கோட்ட அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் தூத்துக்குடியில் திருச்செந்தூர் சாலையில் உள்ள அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு இதுவரை மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று செய்து வந்தனர்.
இதனால், தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் சான்றிதழ் சரி பார்ப்பு பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையெடுத்து, தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி செய்யப்படுகிறது என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவகலங்களிலும் CSC என்ற சேவை மூலம் புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அப்பாய்ன்மென்ட் பெற்று தரப்படும்.
விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். (Passport fee- Rs. ௦௦1500/- சேவைக்கட்டணம் Rs.100/-) விண்ணப்பித்த பின் எந்த தேதியில் அவர்கள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்கிற விபரம் விரிவாக தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
அந்த குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறாக பொது மக்கள் அனைவரும் பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக பாஸ்போர்ட் பதிவு, புதுப்பிக்கும் திட்டத்தினை உபயோகித்து பயனடையுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu