தூத்துக்குடி அருகே மெகா தடுப்பூசி முகாம், துவக்கி வைத்த அமைச்சர்

தூத்துக்குடி அருகே மெகா தடுப்பூசி முகாம், துவக்கி வைத்த அமைச்சர்
X

தூத்துக்குடி மாவட்டம் எல்லைநாயக்கன்பட்டியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி அருகே எல்லைநாயக்கன் பட்டியில் மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் மற்றும் வல்லநாடு ஊராட்சியில் கோவிட் - 19 மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். .மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் இன்று அனைத்து பகுதிகளிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற கொண்டிருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்குகள் என்கின்ற மகத்தான இலக்கோடு முகாம்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஏற்கனவே அனைத்து கிராம பகுதிகளிலும் இந்த முகாம்கள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மக்களை பொறுத்தவரை இந்த மாவட்ட நிர்வாகம் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி முகாம்களுக்கு மக்கள் வந்து சாறை சாறையாய் தடுப்பூசிகள் போட்டு செல்கிற அந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைக்கு இந்த சிறப்பு முகாம்கள் 805 இடங்களில் ஒரே நாளில் இந்த மாவட்டத்தை பொறுத்த வரை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 805 முகாம்களுக்கும் ஒரு இலக்கு ஏற்படுத்தி 55,272 தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு ஏபடுத்தி இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்த இலக்கை காட்டிலும் கூடுதலாக நாங்கள் செலுத்ததுவதற்கு மக்களை திரட்டுயிருக்கிறோம் என்று சொல்லி 74,730 தடுப்பூசிகளை கேட்டு பெற்றிருக்கிறார்கள்.

ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 74000 தடுப்பூசிகள் என்ற இலக்கோடு 805 முகாம்கள் தொடங்கி இருக்கிறது. இப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்லைநாயக்கன்பட்டியில் இந்த முகாமை நாங்கள் தொடங்கி வைத்து இருக்கிறோம்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, இயக்குநர், பொது சுகாதாரம் மரு.செல்வநாயகம், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதிராஜேந்திரன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!