தூத்துக்குடியில் சமூக பாதுகாப்பு துறை ஒப்பந்த பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி மணிநகரில் சமூக பாதுகாப்பு துறை ஒப்பந்த பணியாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்,சமூக பாதுகாப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் சுமார் 400 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சமூகப் பாதுகாப்புத்துறை அலுவலர் சங்கம் ,தென் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளுக்கான பணியாளர்களின் சங்க இணைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறை ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது தொடர்பான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றபபட்டது.
இதைத்தொடர்க்கு, தமிழ்நாடு சமூகப் பாதுகாப்புத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுகிறது.
தமிழகத்தில் 2012 முதல் சமூக பாதுகாப்புத்துறை மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், 32 மாவட்டங்களில மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் 11 பணியாளர்கள் வீதம் 352 பேர் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
சமூக பாதுகாப்பு துறையில் பல்வேறு பொறுப்புகளில் காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கூடுதல் பொறுப்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா காலத்தில் தாய் தந்தைகளை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் எங்கள் பணி முக்கிய பங்கு வகிப்பதாகவும், நாங்கள் ஏற்கனவே சமூக மற்றும் மகளிர் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து எங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். அவர்களும் தமிழக முதல்வரிடம் இது பற்றி எடுத்துக்கூறி நல்ல பதில் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்களை நிரந்தரப்படுத்தி கால முறை சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். கூட்டத்தில் 16 மாவட்டத்தை சேர்ந்த சமூக பாதுகாப்பு துறையை சார்ந்த ஒப்பந்த பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu