தமிழ் மொழிக்காக சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வ.உ.சி : கனிமொழி எம்பி புகழாரம்
ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் மொழிக்காக சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வ.உ.சி : கனிமொழி எம்பி புகழாரம்,
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாமல், தமிழ் மொழிக்காகவும், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வ.உ.சி என கனிமொழி எம்பி புகழாரம் சூட்டினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை அழைத்து வந்து அவருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்கள். பல நிகழ்ச்சிகளை நடத்தி அவருக்கு பெருமை சேர்த்தார்கள். அந்த வழியிலே என்று முதலமைச்சர் அவரது 150-வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக தூத்துக்குடி மக்களே வியக்கக்கூடிய அளவுக்கு பாராட்டக்கூடிய அளவுக்கு யாருமே எதிர்பாராத அளவுக்கு 16 அறிவிப்புகளை அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வரை போற்றக்கூடிய 14 அறிவிப்புகளை வெளியிட்டு இன்று அந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
தன் வாழ்நாளிலே இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்காக தமிழன் அடையாளங்களுக்காக சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து போராடிய ஒரு பெரும் தலைவர் வ.உ.சிதம்பரனார். அவருடைய நினைவுகளை அவருடைய வழியிலே நாம் போற்றவேண்டும் அவருடைய வழியில் இந்த நாட்டின் அடையாளங்களை தமிழ்நாட்டின் பெருமையை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu