வீரசக்கதேவி ஆலய திருவிழா - அனுமதி மறுப்பு போலீசார் குவிப்பு..
பாஞ்சாலகுறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 65 வது உற்சவ திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. தற்போது கொரொனா வைரஸ் பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதை முன்னிட்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதாலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மேற்படி திருவிழாவிற்கு பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி தலைமையில், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உட்பட 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 45 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 330 காவலர்கள் என மொத்தம் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu