ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர்  வேட்புமனு தாக்கல்
X
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா கனிமொழி எம்பி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சி சண்முகையா, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக தென் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்பி முன்னிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வநாயகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி உடனிருந்தார்.

முன்னதாக கனிமொழி எம்பி ஓட்டப்பிடாரம் பஜாரில் பொதுமக்களிடையே பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி டெல்லியில் அடகு வைத்த ஆட்சியை மீட்டெடுக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை முதல்வராக்கிட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையா அவர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்

Next Story