தூத்துக்குடியில் அக். 6 -ல் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் அக். 6 -ல் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
X
குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடியில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்க ஒரு நாள் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி துடிசியா அரங்கத்தில் வைத்து நடக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுசெயலாளர் ராஜ்செல்வின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மானியங்களுடன் கூடிய கடன் உதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன.

அதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்து 06.10.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை துடிசியா அரங்கத்தில் வைத்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை நடத்துகின்றன.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வம் உள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.

முதற்கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோர்க்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சிமுகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்’ திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும்.

எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு : 9791423277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என துடிசியா பொதுச் செயலாளர் ராஜ்செல்வின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு