தூத்துக்குடியில் நவ. 22 இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமையல் எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோருக்கான நவம்பர் மாத குறைதீர் கூட்டம் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 22.11.2023 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
மாவட்டத்தில் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
மேலும், இந்தக் கூட்டத்தில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாமல் இருத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
மேலும், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணலாம். பொதுமக்கள் இந்தக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu