தூத்துக்குடியில் குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை : 2 பேர் கைது.

தூத்துக்குடியில் குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை : 2 பேர் கைது.
X

தூத்துக்குடி மேற்கு காட்டன் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குளிர்பான கடைகளில் வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிமிருந்து 7574 புகையிலை பாக்கெட்டுகள் தனிப்படை போலிசார் பறிமுதல் செய்தனர்.


தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று தூத்துக்குடியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி மேற்கு காட்டன் ரோடு பகுதியில் எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சார்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராஜ் (39), மற்றும் சுடலைக்கண் மகன் செல்வகுமார் (49) ஆகியோருக்கு சொந்தமான குளிர்பான கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அந்தக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7574 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி