தூத்துக்குடி அருகே திருமணமான 3-வது நாளில் நீரில் மூழ்கி இறந்த புதுமண தம்பதி

தூத்துக்குடி அருகே திருமணமான 3-வது நாளில் நீரில் மூழ்கி இறந்த புதுமண தம்பதி
X

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த புதுமண தம்பதி பழனிகுமார்- முத்துமாரி.

தூத்துக்குடி அருகே திருமண முடிந்த 3வதுநாளில் புதுமணத் தம்பதி நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

தூத்துக்குடி அருகே திருமண முடிந்த 3வதுநாளில் புதுமணத் தம்பதி நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மேல ஆத்தூரை சேர்ந்த வெற்றிலை வியாபாரி மாணிக்கராஜ். இவரது மூத்த மகன் பழனிகுமார் (29). இவர், கேரளாவில் இரும்பு விற்பனை செய்யும் டீலராக உள்ளார். இவருக்கும், தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த ராமையா-மாடத்தி தம்பதியின் மகள் முத்துமாரிக்கும் கடந்த 10 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

பெற்றோர்கள் வரன் பார்த்து நடத்திய இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், புதுமணி தம்பதிகள் இருவரும் நேற்று வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டு வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளனர்.

கோயிலுக்கு சென்றவர்கள் நள்ளிரவு வரை வீடு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேட தொடங்கினர். இதுதொடர்பாக முத்துமாரி வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பழனிகுமார் வீட்டிற்கு பின்புறம் உள்ள கோயில் அருகே உள்ள குளத்தில் இன்று காலையில் மணமக்கள் இருவரும் பிணமாக மிதந்தது கண்டறியப்பட்டது. இதனால் இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் முடிந்த மூன்று நாட்களில் மணமக்கள் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் மணமகன்,மணமகள் வீட்டார் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்ததும் ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு மணமக்கள் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. இதிற்கிடையே, போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், 10 அடிக்கு மேல் ஆழமான குளத்தின் கரையை சுற்றி வரும்போது அவர்களில் ஒருவர் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் அவரை காப்பாற்ற முயன்றபோது மற்றொருவரும் இறந்திருக்கலாம் என்றும் தகவல் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் புதுமண தம்பதி இருந்ததால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் நடைபெற்ற வீட்டின் முன்பு இருந்த பந்தல் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படாத நிலையில் மூன்றே நாட்களில் மணமக்கள் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்க்கி உள்ளது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....