தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி..!

தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி..!
X

கோப்பு படம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் அக்டோபர் 4 ம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் அக்டோபர் 4 ஆம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மவாட்ட கடலோர கிராமங்களில் 4.10.2023 அன்று நடைபெற உள்ள மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி (Tsunami Mock Exercise) நடைபெறுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு சில தகவல்களை தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்ட மாதிரி பயிற்சியினை 04.10.2023 அன்று நடத்துகின்றது.

சுனாமி வரும்பட்சத்தில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன்அறிவிப்புகள் பெறப்படும் போது அந்தத் தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றது என்பதை 04.10.2023 அன்று நடைபெறும் ஒத்திகையின் (Tsunami Mock Exercise) மூலம் சோதிக்கப்படும்.

அதன்படி, இந்த மாதிரி பயிற்சி ஒத்திகையானது தூத்துக்குடி மாவட்டத்தில், மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவைப்பட்டி, காயல்பட்டினம் அருகேயுள்ள கொம்புத்துறை, ஓட்டப்பிடாரம் வட்டம் தருவைக்குளம் ஆகிய கடலோர கிராமங்களில் நடைபெறுகிறது.

எனவே, 4.10.2023 (புதன்கிழமை) அன்று நடைபெறும் சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது ஒரு மாதிரி ஒத்திகை பயிற்சி மட்டுமே ஆகும். இதுகுறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும், பீதியும் அடையத் தேவையில்லை என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story