திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்-பணமழையில் கால்நடை துறை

திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்-பணமழையில் கால்நடை துறை
X
தூத்துக்குடி திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்.அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி

தூத்துக்குடி திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்... அனிதா ராதாகிருஷ்ணன்.உற்சாகத்தில் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி

தூத்துக்குடியில் நடந்த திமுக செயல்வீரர்கள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தினார். அப்போது உற்சாகம் அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளை மலர் போல தூவியது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் கடந்த 23ம் தேதி மாலை திமுக செயல் வீரர்கள் கூட்டம், ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.


சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் சுமார் 100 பேருக்கு தலா ஒரு சவரன் தங்க மோதிரத்தை கனிமொழி வழங்கி பாராட்டினார். முன்னதாக, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்ற இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இந்த கச்சேரியில் எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்னை அறிந்தால்" என்ற பாடலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடினார். அவ்வப்போது திமுக நிர்வாகிகள் மலர் தூவியப்படி இருந்தனர். அமைச்சர் பாடலைப் பாடி முடித்ததும் மேடையிலிருந்த திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுக்களை மலர் போல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூவி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

இது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது. பறந்து கீழே விழுந்த 500 ரூபாய் நோட்டுகளை மேடையிலிருந்த இசைக்கலைஞர்கள் எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன்-65 என பிரம்மாண்ட விருந்து நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!