தூத்துக்குடி கடற்கரை முகத்துவாரம் சுத்தப்படுத்தும் பணியை மேயர் ஆய்வு

தூத்துக்குடி கடற்கரை முகத்துவாரம் சுத்தப்படுத்தும் பணியை மேயர் ஆய்வு
X

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை முகத்துவார பகுதி சுத்தப்படுத்தும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி திரேஸ்வரம் கடற்கரை முகத்துவாரப் பகுதியில் பக்கிள் ஓடை முலம் கழிவுகள் கலக்கப்படுகின்றன. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் முகத்துவாரப் பகுதியில் தேங்கி கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

மேலும், வேறொரு பகுதியில் இருந்து மணல்கள் எடுத்து வரப்பட்டு பக்கிள் ஓடை கழிவுகள் நேரடியாக கடலில் கலக்கும் பாதையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் முறையாக கழிவுகள் மற்றும் மழைநீர் நீர் கடலில் கலக்காமல் கரையோர பகுதி வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பக்கிள் ஓடை முகத்துவார பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கா வண்ணமும், அந்தப் பகுதியை ஆழப்படுத்தி சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் முட்புதர்களை அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அந்தப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியை பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி சிந்தாதுறை மாதா கடற்கரை பகுதியில் உள்ள முட்புதர்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை அகற்றி இரவு நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருவதற்காக இரண்டு ஹை மாஸ்ட் விளக்குகளையும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேயரின் அந்த அறிவிப்புக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..