கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகளை ஏப்ரல் 6 முதல் 17ந் தேதி வரை மூட முடிவு

தீப்பெட்டி மூலப்பொருட்களுக்கான விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏப்ரல் 6 முதல் 17ந்தேதி வரை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிப்பிற்கான மூலப்பொருட்களான குச்சி, மெழுகு, பேப்பர், அட்டை விலை கடுமையாக உயர்ந்து விட்டது. மத்திய, மாநில அரசுகளும் போதிய சலுகைகள் வழங்காததால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வடமாநிலங்களில் தமிழக தீப்பெட்டிகளின் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்.
எனவே மூலப்பொருள் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்கக்கோரியும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை மூட முடிவு சய்தனர். இதன்படி தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏப்ரல் 6 முதல் 17ந் தேதி வரை மூடப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு, நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல்,போன்ற இடங்களில் இயங்கி வரும் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்படுகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படுவதால், இத்தொழிலை நம்பியுள்ள 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். இந்த தொழிலை சார்ந்துள்ள அச்சகங்கள், குச்சி தயாரிப்பு கம்பெனிகள், மூலப்பொருட்கள் விற்பனையகங்களும் முடங்கும் அபாயம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu