கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்பட்டதில் முறைகேடு: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்பட்டதில் முறைகேடு: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
X

தூத்துக்குடியில் உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பார்வையிட்டார்.

கோரம்பள்ளம் குளத்தில் ரூ. 12 கோடியில் நடைபெற்ற சீரமைப்பு பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

தூத்துக்குடியில் உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற சீரமைப்பு பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டான பகுதிகளான காலங்கரை பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் குளம் உடைப்பு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தை கேட்டிருந்தார்.

தொடர்ந்து, டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு குளங்களில் ஏற்பட்ட உடைப்பு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கோரம்பள்ளம் குளம் உடைப்புக்கு பொதுப்பணி துறை அதிகாரிகளின் அலட்சியம் ஒரு காரணமாக உள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்த குளம் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.

ஆனால், அதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே இது குறித்து உரிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!