Maldives Detains Indian Fishermen-மாலத்தீவில் கைது : தூத்துக்குடி மீனவ குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்..!

Maldives Detains Indian Fishermen-மாலத்தீவில் கைது : தூத்துக்குடி மீனவ குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்..!
X

தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்களின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்களின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Thoothukudi latest news, Thoothukudi news live, Thoothukudi news today, Today news Thoothukudi,Maldives detains Indian,Maldives Detains Indian Fishermen

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில், கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் மீன்பிடித்துவிட்டுக் கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாகக் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, மீனவர்கள்12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும், விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Maldives Detains Indian Fishermen

இந்த நிலையில், மாலத்தீவு கடலோரக் காவல்படையினால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 12 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.


மேலும், மாலத்தீவு சென்றுள்ள தமிழ்நாடு ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி சங்கத் தலைவர் அந்தோணி ஜெயபாலனை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு 12 மீனவர்களின் தற்போது நிலைமை குறித்து கனிமொழி எம்.பி. கேட்டு அறிந்தார்.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து தலையிட்டு 12 மீனவர்களையும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story