தூத்துக்குடி அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
X
நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு வயது குழந்தை உள்பட 2 பெண்கள் உயிரிழந்தனர்

உத்திர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்பட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக ரயில் மூலம் நேற்று ராமேஸ்வரம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இரண்டு வேன் மூலம் தூத்துக்குடி வந்து பின்னர் திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி புறபட்டுள்ளனர்.

நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு அருகே இரவு 2:30 மணி அளவில் சுற்றுலா பயணிகள் சென்ற வேனும் மாற்றுப் பாதையில் எதிராக வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமன், பார்வதி இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். .

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முறப்பநாடு காவல்துறையினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். அழைத்து வரும் வழியில் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்தது. மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முறப்பநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திற்கு இன்ப சுற்றுலா வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future