தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு மானியத்துடன் கடனுதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு மானியத்துடன் கடனுதவி
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில், புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசின் பின்நிகழ்வு மானியம் (அதிக பட்சம் தலா ரூ. 50,000) வழங்கப்படுகிறது.

வங்கி கடன் பெற்று நீர்ப்பாசன அமைப்பு ஏற்படுத்திய பின்னரே அரசின் மானியம் விடுவிக்கப்படும். கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்றிதழ் நகல், வருமானச் சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிறுகுறு விவசாயி சான்று, பட்டா, சிட்டா ‘ அ” பதிவேடு, அடங்கல் நகல், நில வரைபடம், வில்லங்கச்சான்று, நீர்வள ஆதாரச் சான்று (பொதுப்பணித்துறையில் பெறப்பட்டது), இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை தவறாது இணைத்தல் வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரசின் மானியத்துடன் கூடிய நீர்ப்பாசனக் கடன் திட்டத்தில் விண்ணப்பித்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story
ai in future agriculture