தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
X

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்.

தூத்துக்குடி அருகே பலத்த மழை காரணமாக தரைப் பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. தூத்துக்குடி மணியாச்சி பகுதியில் 63 மில்லி மீட்டர் மழையும், ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது.

தூத்துக்குடியில் இருந்து பொட்டலூரனி வழியாக செக்காரக்குடி செல்லும் பாதையில் புதிதாக நெடுஞ்சாலை துறை சார்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்துக்காக அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதன்காரணமாக செக்காரக்குடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவ மாணவிகளும் செக்காரக்குடி அரசு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினா உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட பாலத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதால் செக்காரக்குடி உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள விவசாயிகள் செக்காரக்குடிக்கு சென்று உரம் வாங்க முடியாத நிலையில் வங்கிக்கு செல்ல முடியாத நிலையில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே முறையாக இந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லாதவாறு கட்டப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!