சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம். (கோப்பு படம்).

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள மேல பூவாணி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த சிறுமியின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்திலும் முருகன் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பாப்பா என்பவர் கூலித் தொழிலாளி முருகன் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடம்பூர் காவல் நிலைய போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தொழிலாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த போக்ஸோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட கூலித் தொழிலாளி முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

இதையெடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கில் திறப்பட வாதிட்ட வழக்கறிஞர், வழக்கை சிறப்பாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போலீசார் ஆகியோருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா