/* */

கோவில்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில், இந்திய மருத்துவர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், ஜேசிஐ ஆகிய அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை செயலாளர் சிவ நாராயணன் தலைமை வகித்தார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம், இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் மதனகோபால், கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் தீபன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார்.

இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளையின் மூத்த மருத்துவர் என்.டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சி.கே சிதம்பரம், செல்வராஜ், கோமதி, கமலா மாரியம்மாள், பூவேஸ்வரி, லதாவெங்கடேஷ், சுஜாதா, ஆத்மிகா, சஞ்சய், ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், பாபு, சீனிவாசன், முத்துச்செல்வம், எஸ் எஸ் டி எம் கல்லூரி செயலாளர் கண்ணன், ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி, ஜே சி ஐ செயலாளர் சூர்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இருந்து துவங்கி மாதாங்கோவில் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு, ஏ கே எஸ் தியேட்டர் ரோடு வழியாக கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று மீண்டும் பயணியர் விடுதியை வந்தடைந்தனர்.

சொர்ணா நர்சிங் கல்லூரி, எஸ்எஸ்டிஎம் கல்லூரி, நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, ஜீ வி என் கல்லூரி, உள்ளிட்ட கல்லூரிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்களும், இந்திய மருத்துவர்கள் சங்க மருத்துவர்களும், பல் மருத்துவர்களும், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஜே.சி.ஐ சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை பொருளாளர் டாக்டர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Updated On: 11 Jun 2023 5:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!