கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா கலை நிகழ்ச்சியுடன் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா கலை நிகழ்ச்சியுடன் கொண்டாட்டம்
X

விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் இந்திராநகர் கல்லூரி வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், தாய்ப்பால் புகட்டுதலை செயல்படுத்துதல், பணிபுரியும் பெற்றோர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற மைய கருத்தினை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சொர்ணா கல்வி நிறுவனங்கள் ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி மாணவிகள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து லோகோ வடிவில் ரங்கோலி கோலம் வரைந்தும் கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி கல்லூரி முன்பிருந்து துவங்கி இந்திராநகர் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர்.

நிகழ்ச்சிக்கு சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் முத்துமாரி, பாலம்மாள்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்திபிரியா அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் துரை. பத்மநாபன் கலந்து கொண்டு ஆரம்ப கால கல்வியில்புதுமையை ஏற்படுத்தியமைக்காக திட்டங்குளம் அங்கன்வாடி பணியாளர் மெர்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும்,தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவிகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் முத்துமுருகன்,கல்லூரி ஆசிரியர்கள் பாண்டிசெல்வி,வினோதா உள்பட அங்கன்வாடி பணியாளர்கள்,நர்சிங் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் தமயந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!